ஆகஸ்ட் முதல் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 26, 2020

ஆகஸ்ட் முதல் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள்

ஈரோடு, ஜூலை 26- ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த நம்பியூரில் ரூ.2 கோடி மதிப் பிலான புதிய திட்டப்பணிக ளைத் தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


நாட்டிலேயே முதன்முத லாக தொலைக்காட்சி சேனல் கள் மூலம் தமிழக மாணவர் களுக்கு பாடம் நடத்தப்படு கிறது. ஆகஸ்ட் மாதம் முதல் 14 தொலைக்காட்சி சேனல் கள் வாயிலாக பாடங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு மற்றும் பாடங்கள் குறித்து 18 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக் குழுவின் அறிக்கை தயார் நிலையில் உள்ளது. அவற்றை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.


பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறு கூட்டலுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக் கலாம். இம்முறையானது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர் களுக்கும் பொருந்தும். தமிழ் நாட்டில் இதுவரை 52 லட் சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது, என் றார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்.


No comments:

Post a Comment