பா.ஜ.க. அய்டி குழுவுடன் தேர்தல் ஆணையத்திற்கு தொடர்பா?
அதிர்ச்சி ஊட்டும் ஆங்கில ஊடகத் தகவல்
மும்பை, ஜூலை 26- கடந்த வருடம் நடந்த மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர் தலில் பாஜக அய்டி குழு, தேர் தல் ஆணையம் ரகசிய தொடர் பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வருடம் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் சிவ சேனா கூட்டணி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் களத்தில் இறங்கின. இதில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்றும் முதல்வர் பதவிக்கான இழு பறி காரணமாகக் கூட்டணி முறிந்தது. தேசியவாத காங்கி ரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலை யில் ' ஜனதா கா ரிப்போர்ட்டர்' என்னும் ஆங்கில ஊடகம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் காணப்படுவதாவது: சாகேத் கோகலே என்னும் ஆர்வலர் மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையம் பாஜக அய்டி குழுவை சேர்ந்த ஒருவரின் சேவையைப் பயன் படுத்தி உள்ளது என டிவிட் டரில் பதிந்துள்ளார். அவர் அடுத்த பதிவில் மகாராஷ் டிரா தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள விளம்பரங்களில் '202, பிரஸ் மேன் அவுஸ், விலே பார்லே, மும்பை' என்னும் ஒரே முக வரியை பயன்படுத்தி உள்ளார் என பதிந்துள்ளார்.
மேலும் சாகேத் கோகலே இதுகுறித்து ஆய்வு செய்ததில் இந்த முகவரி சைன்போஸ்ட் இந்தியா என்னும் விளம்பர நிறுவனம் எனவும் இது அப் போதைய பாஜக அரசின் ஆதரவு பெற்றது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த முகவரியை சோஷியல் சென்டிரல் என் னும் டிஜிட்டல் ஏஜன்சி பயன் படுத்தி வந்ததாகவும் அந்த ஏஜன்சி பாஜக அய்டி குழு வின் தேசிய ஒருங்கிணைப்பா ளர் தேவாங்க் தவே என்பவ ருக்கு சொந்தமானது எனவும் பதிந்துள்ளார்.
இந்த தேவாங்க் தவே என் பவர் அரசு அமைப்புக்கள், பாஜக, மகாராஷ்டிர மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணை யர் உள்ளிட்டோருக்காக பணிகளை மேற்கொண்டவர் ஆவார். இவர் தி ஃபியர்லெஸ் இந்தியன், அய் சப்போர்ட் மோடி போன்ற இணையப் பக்கங்களை நடத்தி வந்ததா கவும் கூறப்படுகிறது. இவரது வாடிக்கையாளர் பட்டியலில் அரசுத் துறைகளுடன் பாஜக வும் உள்ளது. இந்த பக்கங்க ளில் பாஜக அய்டி குழுவின் தகவல்கள் பதியப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment