திருபுவனம், ஜூலை 26- சிவகங்கை மாவட்டம் திருப்புவ னம் அருகே கீழடி அகழாய் வில் கட்டுமானத்திற்கு பயன் படுத்திய வட்ட வடிவ துளை கள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. திருப்புவனம் அருகே கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு பணி பிப்.19ஆம் தேதி நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.
அவற்றில் செங்கல் கட்டு மானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன், எடைக் கற்கள், நீள வடிவ பச்சை நிறஜீ பாசி கள் மற்றும் 5 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக் கப்பட்டன. இந்நிலையில் கீழ டியில் வளைவான செங்கல் கட்டுமானம் கண்டறியப் பட்டுள்ளது. அதன் அருகி லேயே 6 அடி ஆழத்தில் வளைவான அமைப்பில் 6 சிறிய வட்ட வடிவ துளைகள் கண்டறியப்பட்டுள்ளன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வசிப்பிடங்கள் பெரும்பாலும் வட்ட வடி வில் அமைந்திருக்க வாய்ப் புண்டு என்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மூங்கில் கழிகள், மரக்குச்சிகளை வட்ட வடிவில் நட்டு அதன் மேல், கூரை வேய்ந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக கடந்த 5ஆம் கட்ட அகழாய்வில் மேற்கூரை அமைப்பை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்திருந்தனர். தற் போது 6ஆம் கட்ட அகழாய் வில் கீழடியில் மொத்தம் 12 குழிகள் தோண்டப்பட்டுள் ளன. மேலும் கூடுதல் குழி களில் அகழாய்வு மேற்கொள்ள நில அளவைப்பணிகள் நடந்து வருகின்றன. செப்டம்பரில் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் கீழடியில் அக ழாய்வு பணிகள் விறுவிறுப் படைந்துள்ளன.
No comments:
Post a Comment