மருத்துவம், பல் மருத்துவப் படிப்புத் தேர்வுகள் தள்ளிவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 26, 2020

மருத்துவம், பல் மருத்துவப் படிப்புத் தேர்வுகள் தள்ளிவைப்பு

சென்னை, ஜூலை 26-  முது நிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவபடிப்புகளுக்கான இறுதி ஆண்டுத் தேர்வுகள் கடந்த மே மாதம் நடை பெற்றிருக்க வேண்டும்.


கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்ததால், தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாண வர்கள் கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட் டனர். தேர்வுகளை உடனே நடத்துமாறு மாணவர்கள் தரப்பில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல் கலைக்கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.


இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதிமுதல் தேர்வுகளை நடத்த பல்கலைக் கழகம் முடிவு செய்திருந்தது. இதற்கு, மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஆட்சேபம் தெரிவித்தது. அதனால், முது நிலை மருத்துவப் படிப்புக ளுக்கான தேர்வுகளை தள்ளி வைப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. தற்போது, முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுக ளையும் பல்கலைக்கழகம் தள்ளிவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment