ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 26, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • செப்டம்பர் மாதத்தில் கரோனோ தொற்று இன்னும் அதிகரிக்கும் என இந்திய பொது சுகாதாரக் கழகத்தின் இயக்குனர் ஜி.வி.எஸ்.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

  • அயோத்தி ராமன் கோயில் பூமி பூஜையைப் பெரிய நிகழ்ச்சியாக நடத்திட வேண்டும் என நான்கு நாள்கள் போபாலில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கூட்டத்தில் கூறப்பட்டது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும், கிரிமிலேயர் முறையை நீக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:



  • கிராமப்புற, ஏழை மக்களுக்கு உரிய மருத்துவ வசதியினை ஏற்படுத்தித் தருவது தான் சமூக நீதி என பாட்னா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

  • பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக ஏ.பி.வி.பி. (ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் பிரிவு) தேசியச் செயலாளர் டாக்டர் சுப்பையா சண்முகசுந்தரம் மீது சென்னை காவல் துறை, அய்.பி.சி. 271, 427, பெண்களுக்கு எதிரான குற்றச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

  • சிலந்தி வலை எனும் தலைப்பில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையில், இந்திய சீன எல்லைப் பிரச்சினை, பொருளாதார வீழ்ச்சி, ராஜஸ்தானில் சச்சின் பைலட் எடுத்த சிறுபிள்ளைத்தனமான செயல் ஆகியவற்றை விவரித்து உள்ளார்.


தி இந்து, டில்லிப் பதிப்பு:



  • 2001இல் ராணுவ தளவாடங்களில் ஊழல் நடந்ததாக டெகல்கா பத்திரிக்கை வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், சமதா கட்சியின் தலைவர் ஜெயா ஜெட்லி உள்ளிட்ட மூவர் மீதும் டில்லி சி.பி.அய். நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. 2001இல் மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஜார்ஜ் பெர்னாண் டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்.

  • ஆர்.எஸ்.எஸ். மற்றும் ராணுவம் பற்றி டிவிட்டரில் பதிவிட்டதற்காக ஜவஹர்லால் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர் மீது காவல்துறை வழக்கு..


- குடந்தை கருணா


26.7.2020


No comments:

Post a Comment