பெரியார் கேட்கும் கேள்வி! (56) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 26, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (56)


சீர்திருத்தத் திருமண ஒப்பந்தத்தில் இருவரும் சமம் என்றும், வாழ்க்கை இன்ப துன்பங்களிலும், போக போக்கி யங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவபாவம் மிளிரும் இந்த மாறுதல் அவசியமா, இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டே இதை யோசிக்காதீர்கள். உங்களுடைய செல் லப் பெண் குழந்தைகளையும், அன்புச் சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப் பாருங்கள். உங்கள் தாயார்மார் சுதந்திரவாதிகளாயிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டாமா?


- தந்தை பெரியார், 'குடிஅரசு', 13.12.1943


- ‘மணியோசை’


No comments:

Post a Comment