கல்வித் தொலைக்காட்சி மூலம் நடக்கும் பாடம், வகுப்புகள், நேரம், என்ன பாடம் என்பதற்கான பட்டியலையும், அலை வரிசை நிறுவனங்கள் குறித்த தகவலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடக்கும் நேரம்:
2ஆம் வகுப்பு மாலை 5 முதல் 5:30 மணி வரை
3ஆம் வகுப்பு மாலை 5:30 முதல் 6 மணி வரை
4ஆம் வகுப்பு மாலை 6 முதல் 6:30 மணி வரை
5ஆம் வகுப்பு மாலை 6:30 முதல் 7 மணி வரை
இது தவிர 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும், நீட், ஜெஇஇ-க்கான வகுப்புகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. நாள் தோறும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன. கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும். இதனை அலைவரிசைகளில் தமிழ்நாடு முழு வதும் காணலாம். இந்த வாய்ப்பினை மாணவர்கள் நன்கு பயன்படுத் திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment