நிலச்சரிவு நடந்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல இ-பாஸ் வழங்க வேண்டும்  : தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 10, 2020

நிலச்சரிவு நடந்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல இ-பாஸ் வழங்க வேண்டும்  : தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


சென்னை, ஆக.10 கேரளாவில் நிலச்சரிவு நடந்த இடத்திற்கு உற வினர்கள் செல்ல இ-_பாஸ் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


கேரளா நிலச்சரிவு விபத்தில் உயிர் இழந்தவர்களின் உறவினர்கள், அங்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு அந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-_பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள ராஜமாலா பகுதி தேயிலைத் தோட் டத்தில் வேலை செய்த தமிழக தொழி லாளர்கள் 80 பேருக்கும் மேற்பட் டோர் நிலச்சரிவில் சிக்கி 29 பேர் இதுவரை மரணமடைந்துள்ளார்கள் என்றும், மீதிப்பேரை மீட்கும் பணி தொடருகிறது என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்து அங்கும் செல்ல முடி யாமல் உறவினர்கள் அனைவரும் கண் கலங்கி தவித்துக் கொண்டிருக் கிறார்கள்.


ஆகவே நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்திட கேரள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு உத்தர விடுமாறும், தமிழக அரசின் சார் பிலும் உயிரிழந்தோரின் குடும்பங் களுக்கு நிதியுதவி அளித்திட வேண் டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டு கொள்கிறேன்.


கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தற்போது அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து உயிரிழந்தோர் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும், மண்ணில் புதைந்து கிடக் கும் அனைவரையும் விரைந்து மீட் டிட மீட்புப் பணிகளைத் தீவிரப் படுத்திட வேண்டும் என்றும் வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment