ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
சென்னை, ஆக.10 சொந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரித்து பலப்படுத்த வேண்டும். இதற்காக, தங்கள் கடன் வழங்கும் அளவை 5 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளலாம் என வங்கிகளுக்கு,ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. பெண் தொழில் முனை வோருக்கு வங்கிகளில் இதன் மூலம், எளிதாக கடன் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார முன்னேற் றத்துக்கு வங்கிகள் முதுகெலும்பாக திகழ்கின்றன. தொழில், விவசாயம், உற்பத்தி, கல்வி என பல்வேறு பிரிவு களுக்கு வங்கிகள், கடன் வழங்கி வரு கின்றன. இதன் மூலம், தனிமனிதர்களின் வாழ்க்கை மேம்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பெண் தொழில்முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண் டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் 56% அதிகம்
சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, ஆக.10 தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் தற்போதுவரை வழக்கத்தைவிட 56% அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவக் காற்று தீவிரமடைந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கும் மேலாக அதிகனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை தமிழகத்தில் சராசரியாக 151 செமீ மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 236 செமீ மழை, அதாவது வழக்கத்தைவிட 56 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
உள் தமிழகம் மற்றும் அதை யொட்டிய தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்தில் உள் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார்.
No comments:
Post a Comment