கலைஞர் நினைவுநாளில் சூளுரைப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 7, 2020

கலைஞர் நினைவுநாளில் சூளுரைப்போம்!


அய்யாவிடம் அறிவைப் பெற்றவரே


அண்ணாவிடம் அரசியல் கற்றவரே


அரசியல் சதுரங்கத்தின் சாதுரியமே


அரியணை வியந்திட்ட அமைச்சரே


தமிழால் வளர்ந்திட்ட தனயனே


தமிழை உயர்த்திட்ட தலைமகனே


இனத்தைக் காத்திட்ட காவலனே


எதிரியை வீழ்த்திட்ட போர்க்கலனே


மொழியை மீட்டிய கலைஞனே


தமிழைப் பாடிய பாவலனே


தமிழால் உலகளந்த அறிஞனே


முத்தமிழ் போற்றிடும் முதல்வனே


 


சமூகநீதிக்கு முழங்கிய முரசொலியே


பெண்ணுரிமை பேணிய ஞானியே


சமத்துவபுரம் கண்ட சரித்திரமே


சனாதன சிரமறுத்த போர்த்திறமே


இறந்துவிட்டாய் நீயென்ற நினைப்பினிலே


வெற்றிடந்தான் இருக்குமென்ற கணிப்பினிலே


மண்ணாள நடிக்கின்றார் வேடதாரிகள்


மனுஆளத் துடிக்கின்றார் கபடதாரிகள்!


 


"தாயின் ஆணை கிடைத்துவிட்டது


புறப்படு மனோகரா போருக்கு"


என்று நீ எழுதிய வசனம் போல்


"தந்தையின் ஆணை கிடைத்துவிட்டது


புறப்படு ஸ்டாலின் போருக்கு"


என்றுநீ எதிரொலிக்கும் ஆணை


தளபதியைக் களம்காணப் பணிக்கும்


தமிழினம் அவர்பின்அணி வகுக்கும்


கழகம் மீண்டும்ஆட்சி அமைக்கும்


தமிழ்நாடு கவிபாட அழைக்கும்


கலைஞரின் நினைவுநாளில் - இதைச்


சூளுரையாய்த் தமிழினமே ஏற்கும்!


- அதிரடி க.அன்பழகன்,


கழக மாநில கிராமப்பிரச்சார அமைப்பாளர்.


No comments:

Post a Comment