வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 26, 2020

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா


நாகை மாவட்ட இளைஞரணித் தலைவர், திருக்கண்ணபுரம் ஊராட்சி இராதாரம்பூர், செட்டித்தெரு கி.சுரேஷ்-இரா.நிவேதா ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 24-8-2020 அன்று காலை 10 மணியளவில் மணமகன் இல்லத்தில் நடைபெற்றது. கழகப்பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமை வகித்து மணவிழாவினை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா வரவேற்றார். மாவட்டத் தலைவர் நெப்போலியன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், ஒன்றியத் தலைவர் பொன்.செல்வராசு, மாவட்டத் தொழிலாளரணி செயலாளர் இராச. முருகையன், தி.மு.க. திருமருகல் ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன், அஜிதா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையேற்று வாழ்த்துரை வழங்கினர், கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். காரைக்கால் மண்டலச் செயலாளர் கிருட்டினமூர்த்தி, காரை மண்டல இளைஞரணிச் செயலாளர் பெரியார் கணபதி, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் நாத்திக பொன்முடி, கு.சிவானந்தம், உரத்தநாடு உத்திராபதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர், மண்டல இளைஞரணிச் செயலாளர் இராஜ்மோகன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment