வத்திராயிருப்பு ஒன்றிய கழக தலைவர் மு.சின்னசீனி - பார்வதி இணையரது மகன் சி.இளங்கதிர், வடுகபட்டி பா.குமார் - காட்டுராணி இணையரது மகள் கு.பாண்டியம்மாள், இவர்களது வாழ்விணையர் ஏற்பு விழா 21.8.2020 வெள்ளி மாலை 5 மணிக்கு கூமாபட்டி இராமசாமி யாபுரம் மணவிழா அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் இல.திருப்பதி தலைமையில், செயலாளர் விடுதலை தி.ஆதவன் முன்னிலையில், பொதுக்குழு உறுப்பினர் வானவில் வ.மணி அவர்கள் இணையரது உறுதிமொழி பெற்று மணவிழாவினை நடத்தி வைத்தார். இராசபாளையம் நகர கழக தலைவர் பூ.சிவகுமார் வாழ்த்துரையாற் றினார். மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.சுந்தரமூர்த்தி, திருத்தங்கல் நகர அமைப் பாளர் மா.நல்லவன், ஆகாசம்பட்டி அ.சுப்ரமணி, கூமாபட்டி கிளைக் கழகச் செயலாளர் பா.நடராசன், மணிமாறன், தங்கதுரை மற்றும் கழகத் தோழர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றுச் சிறப் பித்தனர். மணவீட்டார் சார்பாக மூ.சீனி நன்றி கூறினார். மணவிழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதியாக ரூ.500 நன் கொடை வழங்கினர். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தோழர் மு.சீனி அவர்களிடம் செல்பேசி வழியாக வாழ்த்து தெரிவித்தார். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயகுமாரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment