ஊழியர்களின் ஊதியம்,ஓய்வூதியத்துக்காக  1,252 கோயில்களின் நகைகளை அடகு வைக்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 26, 2020

ஊழியர்களின் ஊதியம்,ஓய்வூதியத்துக்காக  1,252 கோயில்களின் நகைகளை அடகு வைக்க முடிவு

திருவனந்தபுரம்,ஆக.26, கேரளாவில தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள சபரி மலை உள்பட 1,252 கோயில் களின் நகைகளை அடகு வைக்க முடிவு செய்யப்பட்டுள் ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.


கேரள மாநிலத்தில் கரோ னாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத் தும் வகையில் அமல்படுத்தப் பட்ட ஊரடங்கை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. இதனால், அனைத்து தேவசம் போர்டுகளும் வருமானம் இல்லாமல் தவித்து வரு கின்றன. பிரசித்தி பெற்ற சபரி மலை அய்யப்பன் கோயில் திருவிதாங்கூர் தேவசம்போர் டின் கட்டுப்பாட்டில் உள் ளது. இந்த தேவசம் போர் டின்கீழ் மொத்தம் 1,252 கோயில்கள் உள்ளன. சபரிமலை அய்யப்பன் கோயில் வருமா னத்தை வைத்துதான் மற்ற கோயில்கள் அனைத்தும் நிர் வகிக்கப்பட்டு வருகின்றன.


தேவசம்போர்டு ஊழியர் களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக மாதம் ரூ.35 கோடி தேவைப்படுகிறது. தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்போது ஏற்பட்டு உள்ள நெருக்கடியை சமாளிக்க, கோயில்களில் உள்ள தங்கத்தை ரிசர்வ் வங் கியில் அடகு வைத்து பணம் பெற ஆலோசிக்கப்பட்டு வரு கிறது. இதுதொடர்பாக திரு விதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு, ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை நடத்தி உள்ளார்.


நிதி பிரச்சினை காரண மாக, திருவிதாங்கூர்  தேவசம் போர்டில் 50 பியூன்கள், 140 கிளார்க் பதவிகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளன. இது, ஊழியர்களுக்கு கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தி இருக்கிறது.


தேவசம்போர்டு ஊழியர் களின் சம்பளம், ஓய்வூதியத் துக்காக மாதம் ரூ.35 கோடி தேவை. இதனால், சபரிமலை கோயில் வருமானத்தை  ஈடு கட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு அரசு ரூ.100 கோடி கொடுப்பதாக அறிவித்து இருந்தது. ஆனால்,. இதுவரை ரூ.30 கோடி மட் டுமே வழங்கப்பட்டு உள்ளது. இதனால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை உருவாகி இருக்கிறது.


No comments:

Post a Comment