சென்னை, ஆக. 26- தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து, சட்டமன்ற ஜனநாய கத்தை சென்னை உயர்நீதி மன்றம் காப்பாற்றி இருக்கி றது. சட்டமன்ற உறுப்பினர் களின் கருத்து சுதந்திரத்தை யும், மக்களை வெகுவாகப் பாதிக்கும் பிரச்சினைகளை யும் சட்டமன்றத்தில் எழுப் பும் உரிமையையும் சபாநாய கர் காப்பாற்றத் தவறிவிட் டாலும், சென்னை உயர்நீதி மன்றம் அந்த உரிமையை சட் டப்பூர்வமாகப் பாதுகாத்து இருப்பது வரலாற்றுச் சிறப் புமிக்கது.
கேன்சரை உருவாக்கும் குட்கா விற்பனையைத் தாரா ளமாக அனுமதித்து அதில் பங்கேற்ற அ.தி.மு.க. அரசின் குட்கா ஊழலை நாட்டு மக் களுக்குத் தெரிவித்திடவே குட்கா பாக்கெட்டுகளை எடுத்துச்சென்றதை மறைத்து, நீதி வழுவிய முறையில் சபா நாயகர் மூலமாக தி.மு.க. சட் டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய சதிச் செயலில் இறங்கியது அ.தி.மு.க. அரசு. அதை இந்தத் தீர்ப்பு தகர்த் தெறிந்து இருக்கிறது. சட்ட மன்ற வரலாற்றில் ஜனநாய கம் போற்றுகின்ற தீர்ப்பை, தி.மு.க. சார்பில் மனதார வரவேற்று மகிழ்கிறேன்.
இந்த வழக்கில் தி.மு.க. சார்பில் வாதாடி, சிறப்பான இந்தத் தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருந்த கட்சியின் மூத்த வழக்குரைஞர் ஆர். சண்முகசுந்தரம் மற்றும் என். ஆர்.இளங்கோ எம்.பி. ஆகி யோருக்கு எனது பாராட் டுகளைத் தெரிவித்துக்கொள் கிறேன். குட்கா வியாபாரிக ளிடம் மாமூல் வாங்கிய அமைச்சர்மீது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், இன்னும் குட்கா விற்பனை தங்குதடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மை மட்டுமல்லாமல்; தமிழகத்திற் கும் தலைகுனிவு ஆகும்.
தடை செய்யப்பட்ட போதைப் பொருள் தாராளமாக விற்கப் படுகிறது என்பதை அம்பலப் படுத்திய எதிர்க்கட்சியின் மீது உரிமை மீறல் விதியை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு பாய்ந்த அரசு, குட்கா விற்பனையை கட்டுப் படுத்துவதில் பதுங்கிவிட்டது. அதனால் குட்கா எனும் சமூ கத் தீமையின் போக்குவரத் தும் விற்பனையும் கொடி கட்டி பறக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள் ளார்.
No comments:
Post a Comment