சென்னை, ஆக.16 சென்னை யில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று (16.8.2020) காலை நிலவரப்படி 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனாவால் பாதிக்கப்பட் டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடை வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கரோ னாவால் பாதிக்கப்படுவர் களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னையில் 1,15,444 பேர் கரோனாவால் பாதிக் கப்பட்டுள்ளனர். இதில் 1,01,689 பேர் குணம் அடைந் துள்ளனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோ னாவுக்கு நேற்றுவரை 2,434 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை யில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்துள்ளனர்.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை யில் 6 பேரும், ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தலா 2 பேரும், தனியார் மருத்துவ மனையில் 3 பேரும் கரோ னாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment