நெல்லை மண்டல மாணவர் கழகம் தீர்மானம்
திருநெல்வேலி,ஆக.25- திரு நெல்வேலி மண்டல திராவிட மாணவர் கழக கலந்துரையா டல் கூட்டம் 23.8.2020 அன்று காலை 11 மணிக்கு, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் அறிவா சான் தந்தை பெரியார் 142 ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு கொண்டாடி மகிழ வேண்டியதன் அவசி யத்தை விளக்கி தொடக்க வுரையாற்றினார்.
மருத்துவக்கல்லூரி மாண வர் கழக மாநில அமைப்பாளர் மருத்துவர் உ.இரா.மானவீ ரன், மாநில துணை அமைப் பாளர் தூத்துக்குடி மருத்து வர் க.கதிரவன், தூத்துக்குடி மாணவர் கழக பொறுப்பா ளர்கள் ஆ.கலைமணி, ஆ.லெனின், முகில், மு.செல்வ சசிகுமார், நெல்லை மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் இர.கவுசல்யா, சவுமியா, அருண், அசோக், விசாலினி, தென் காசி மாணவர் கழகப் பொறுப் பாளர் ம.அமுதன், இனியன், மருத்துவ மாணவர் உ.இரா.மணிமொழி, மண்டல மாணவர் கழகச் செயலாளர் கீழப்பாவூர் சவுந்திரபாண்டியன், பொதுக்குழுஉறுப்பினர் தயாளன், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் தி.ப. பெரியாரடியான், மாவட்டத் துணைச் செயலாளர் ஆழ் வார், நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி, மாவட் டச் செயலாளர் ச.இராசேந் திரன், மண்டலத் தலைவர் பால்.இராசேந்திரம், மண்ட லச் செயலாளர் அய்.இராமச் சந்திரன், நெல்லை முத்துக் குமார், திண்டுக்கல் இராமர், மாநில அமைப்புச் செயலா ளர் ஊமை.செயராமன், மாநில மகளிரணிச் செயலாளர் தக டூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
நிறைவாக மாநில அமைப் புச் செயலாளர் மதுரை வே. செல்வம் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் குமரி மாவட் டத் தலைவர் எம்.எம்.சுப்ர மணியம், நாகர்கோவில் பொன் னுராசன், மணிமேகலை, கோவில்பட்டி வளர்மதி, கீழப் பாவூர் பொன்ராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
அறிவாசான் தந்தைபெரி யார் 142 பிறந்தநாள் விழாவை வீடுதோறும் பெரியார் அவர்களின் படத்திற்கு மாலை அணி வித்து, இனிப்பு வழங்கி கொண் டாடுவது எனவும், புதிய கல் விக் கொள்கையின் பேரா பத்தை விளக்கி தமிழர் தலை வர் அவர்கள் எழுதிய அறிக் கையினை பரப்புவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment