தந்தைபெரியார் 142ஆவது பிறந்தநாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 24, 2020

தந்தைபெரியார் 142ஆவது பிறந்தநாள்

மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதென


ஒசூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்



ஒசூர், ஆக. 24- ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் காணொலிவழியாக 21.8.20 அன்று மாலை மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட மகளிரணிச் செயலாளர் இலதாமணி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட மகளி ரணித் தலைவர் செ.செல்வி அவர்களின் தாயாரும், பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம் அவர்களின் சகோதரியுமான சவுரியம் மாள் மறைவிற்கு 1நிமிடம் அமைதி காத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பெரியார் பிஞ்சு நன்மதி தொடக்கவுரை யாற்றினார். மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் உரையாற்றினார். நடந்து முடிந்த மாவட்டத் தலைவர்கள்,செயலாளர்கள் காணொலி கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழி காட்டுதல் உரையின் கருத்து களை விளக்கியும், தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண் டாட வேண்டியும், தற்போது இயக்க நிலைப்பாடு, செயல் பாடுகள் குறித்தும் உரையாற் றினார்.


மாவட்ட மகளிர் பாச றைத் தலைவர் சங்கீதா, செயலாளர் நிஷா, மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் க.கா.சித்தாந்தன், நகர மகளி ரணி செயலாளர் கிருபா சின்னசாமி, மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, மண்டலச் செயலாளர் கோ.திராவிடமணி, மண்டல இளைஞரணிச் செயலாளர் வண்டி ஆறுமுகம், பகுத்தறி வாளர் கழக மாவட்டத் தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி, செயலாளர் சிவந்திஅருணாசலம், மாண வர் கழகம் க.கா.வெற்றி, மாநில பகுத்தறிவாளர் கழ கத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், மாநில மகளிரணிச் செயலாளர் தக டூர் தமிழ்செல்வி ஆகியோரின் கருத்துரைகளைத் தொடர்ந்து,  மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் இயக்க செயல்பாடுகள், இணையத் தில் செயல்படுவதுகுறித்து உரையாற்றினர்.


புதிய பொறுப்பாளர்கள்:


பெங்களூரு டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி அமைப்பாளர் மு.பிரபாக ரன், கருநாடக மாநிலம் ஆனைகல் அலேன்ஸ் சட்டக் கல்லூரி அமைப்பாளராக அஃபிரிடி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் வே.ரமேஸ்வரன், துணைச் செயலாளர் ஜெய சந்தர், ஒசூர் மாநகர பகுத் தறிவாளர் கழகத் தலைவர் பெரியார் சுப்பிரமணி, செய லாளர் வெங்கடசமி, அமைப் பாளர் கு.சசிகுமார், திரா விடர் கழக மாநகர துணைத் தலைவர் சின்னராசு, ஒசூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ஆகாஷ், ஒசூர் மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளர் செ.ஆ. வளர்மதி ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக அறி விக்கப்பட்டனர்.


தீர்மானம்:


மாவட்டம் முழுவதும் வீட்டுக்கு வீடு பெரியார் படம் வைத்து மாலை அணி வித்து மரியாதை செலுத்துவது.


ஒசூர் மாநகரில் குறைந்தது 10 இடத்திலாவது பெரியார் 142 பிறந்தநாள் குறித்து சுவர் விளம்பரம் செய்வது. மாவட்ட பகுதியான அஞ்செட்டி, தளி, கெலமங்கலம், தேன்கனிகோட்டை, இராயகோட்டை, பாகலூர், பேரிகை, சூளகிரி ஆகிய பகு தியில் தந்தைபெரியார் 142 சுவரொட்டிகள் ஒட்டுவது என முடிவு செய்யப்பட்டது.


இக்கூட்டத்தில் பொதுக் குழு உறுப்பினர் அ.செ.செல் வம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர் பாண்டி, மாணவர் கழகம் செல்லதுரை, காவேரிபட்ட ணம் ஹரிஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


இறுதியாக மாவட் டச் செயலாளர் மா.சின்னசாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


No comments:

Post a Comment