உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை
லண்டன், ஆக. 24- கடந்த 1918ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல் போல் கரோனா வைரஸ் நீடிக்காது, இப்போது இருக்கும் தொழில் நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவற்றால் 2 ஆண்டுக ளுக்குள்ளாகவே கரோனா வைரஸை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று உலக சுகா தார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரி யாசிஸ் நம்பிக்கை தெரிவித் துள்ளார்.
கடந்த 1918ஆம் ஆண்டில் உலகையே உலுக்கியது ஸ்பா னிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல். ஹெ1என்1 இன்ப்ளூயன்ஸா ஏ வைரஸ் எனப்படும் இந்த வைரஸ் 1918 பிப்ரவரி முதல் 1920 ஏப்ரல் வரை உலகையே உலுக்கி எடுத்தது.
உலகம் முழுவதும் இந்த வைரஸால் 50 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். அதா வது, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டனர்.
1.70 கோடி முதல் 5 கோடி வரை மக்கள் உயிரிழந்தனர் என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன. மனிதகுல வர லாற்றிலேயே மிகவும் மோச மான தொற்று என்று இன்ற ளவும் அஞ்சப்படுகிறது.
அதேபோன்ற அச்சத்தை ஏற்படுத்தி இருப்பது சீனாவி லிருந்து பரவிய கரோனா வைரஸ். உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 2.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், 8 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பு மருந்துகள் தீவிரமான மருத்துவப் பரி சோதனையில் இருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் அல் லது அடுத்த ஆண்டு தொடக் கத்தில் மருந்து மனிதர்களுக்கு கிடைத்துவிடும் என நம்பப் படுகிறது.
இந்த சூழலில் உலக சுகா தார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரி யாசிஸ் 21.8.2020 அன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறிய தாவது:
கரோனா வைரஸ் என்பது நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை வரும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினையாகும். கடந்த 1918ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல் பரவிய வேகத் தைவிட, இந்த கரோனா வைரஸ் தொற்றை வேகமாக பரவுவதற்கு உலகமயமாக்கல், நெருங்கியதொடர்பு, போக்கு வரத்து ஆகியவை அனும தித்துவிட்டன. ஆனால், ஸ்பானிஷ் ப்ளூ பரவியபோது குறைந்த அளவு தொழில்நுட் பம், மருத்துவக் கண்டுபிடிப் புகள் மட்டுமே இருந்ததால், அதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் முடியவில்லை. ஆனால், கரோனா வைரஸை அப்படி நாம் விடவில்லை. நவீன தொழில்நுட்பம், மருத் துவக் கண்டுபிடிப்புகளால், 2 ஆண்டுகளுக்குள்ளாகவே கரோனா வைரஸை நாம் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியும் என நான் நம்புகி றேன். குறிப்பாக அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சி இருந்தால் நிச்சயம் சாத்திய மாகும்” இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.
மருத்துவர் மைக்கேல் ராயன் எச்சரிக்கை
உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவு தலைமை மருத்துவர் மைக்கேல் ராயன் கூறுகையில் “1918ஆம் ஆண் டில் பரவிய ஸ்பானிஷ் ப்ளூ பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தியது, 3 கட்ட அலைகளாகப் பரவியது. அதிலும் 2ஆம் கட்ட அலை உலகில் மிக மோசமான உயிர்சேதத்தை ஏற்படுத்தி யது. ஆனால், அதுபோன்று கரோனா வைரஸில் ஏற்பட வில்லை. ஆனால், அனைத்து வைரஸும் ஒரேமாதிரியான அலைகளை ஏற்படுத்துவ தில்லை. வைரஸை நாம் கட் டுக்குள் வைக்கவில்லை என் றால், அது மேலே எழும்பி விடும்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment