மத்திய, மாநில அரசு நிதிஅளிப்பதில் காலதாமதத்தால், கீழடி எலும்பு மாதிரி டிஎன்ஏ ஆராய்ச்சியும் தாமதமாகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 24, 2020

மத்திய, மாநில அரசு நிதிஅளிப்பதில் காலதாமதத்தால், கீழடி எலும்பு மாதிரி டிஎன்ஏ ஆராய்ச்சியும் தாமதமாகிறது

துணைவேந்தர் கிருஷ்ணன்



கீழடி, ஆக. 24- கீழடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரியின் டிஎன்ஏ ஆராய்ச் சிக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய  நிதி  கரோனா ஊர டங்கால்  தாமதமாவதால் ஆராய்ச்சி முடிவுகள் வெளி வருவதில் தாமதம் ஏற்படுவ தாக  மதுரை காமராசர் பல் கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறினார்.


இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் 21.8.2020 அன்று கூறுகையில், சிவ கங்கை மாவட்டம், கீழடியில் தொல்பொருள் ஆய்வாளர் களால் கண்டெடுக்கப்பட்ட எலும்பு மாதிரிகளில் உள்ள டிஎன்ஏ குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள மதுரை காம ராசர் பல்கலைக் கழகத்திற்கு ரூ.3 கோடி மத்திய, மாநில அரசு ஒதுக்கியது. கரோனா ஊரடங்கால் இந்த நிதி வருவது தாமதமாவதுடன், ஊரடங்கால் ஆராய்ச்சி மாண வர்களின் வருகை இல்லாத தால் டிஎன்ஏ ஆராய்ச்சி முற் றிலும் தடைப்பட்டுள்ளது.


அதற்கு முன்னதாகவே மத்திய, மாநில அரசு நிதி விடு விக்கும் பட்சத்தில் டிஎன்ஏ ஆராய்ச்சிக்கான ஆய்வ கத்தை தயார் செய்யும் பணி களை முடுக்கி விட வாய்ப் பாக அமையும். கரோனா ஊர டங்கு முடிந்து கல்லூரிகள் திறந்தவுடன் ஆராய்ச்சி மாணவர்களால் கீழடியில் கிடைத்த எலும்பு மாதிரி களில் உள்ள டிஎன்ஏவை ஆராய்ந்து அதனுடைய காலம், அப்பகுதி மக்கள் யார், நாகரீகம் என்ன என் பதை கண்டறிய ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சி செய்து உலகப் பாரம்பரிய மிக்க தமிழர்களின் வரலாற் றையும் வாழ்க்கை முறைகள் குறித்தும் அறிக்கை வெளியிடுவோம். மேலும் கீழடியில் கிடைத்த எலும்பு மாதிரிகள் உள்ளிட்ட பொருட்களை தற்போது மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் உயிரி யல் துறை ஆய்வகத்தில் குளிர் சாதன அறையில் பாதுகாப் பாக வைக்கப்பட்டுள்ளது’’ என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment