நடப்பு நிதியாண்டின் பொருளாதாரம் 16.5 விழுக்காடு பின்னடைவைச் சந்திக்கும் : எஸ்.பி.அய். ஆய்வறிக்கை எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 20, 2020

நடப்பு நிதியாண்டின் பொருளாதாரம் 16.5 விழுக்காடு பின்னடைவைச் சந்திக்கும் : எஸ்.பி.அய். ஆய்வறிக்கை எச்சரிக்கை

மும்பை,ஆக.20, நடப்பு நிதி யாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 16.5 விழுக்காடு பின்னடைவைக் காணும் என பாரத ஸ்டேட் வங்கியின் எக்கோராப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அந்த ஆய்வறிக் கையில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது:


கரோனா ஏற்படுத்திய இடப் பாடுகளால் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 16.5 விழுக் காடு பின்ன டைவைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முந்தைய மே மாதத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 20 விழுக்காடு அளவுக்கு பின்ன டைவைச் சந்திக்கும் என மதிப் பிடப்பட்டிருந்தது.


இந்த நிலையில், தற்போதைய சூழல்களை கருத்தில் கொள்ளும் போது அதைவிட குறைவாகவே வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.


இதுவரையில், பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள 1,000 நிறுவ னங்கள் தங்களுடைய முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதில், 25 விழுக் காட்டுக்கும் மேற்பட்ட நிறுவனங் களின் வருவாய் சரிவைச் சந்தித் துள்ளது. அதேபோன்று, 55 விழுக் காட்டுக்கும் அதிகமான நிறுவனங் களின் நிகர லாபம் வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளதாக அந்த ஆய் வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


No comments:

Post a Comment