ரயில் பயணக் கட்டணங்கள், ரயில் நின்று செல்லும் இடங்களைத் தனியாரே முடிவு செய்து கொள்ளலாமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 20, 2020

ரயில் பயணக் கட்டணங்கள், ரயில் நின்று செல்லும் இடங்களைத் தனியாரே முடிவு செய்து கொள்ளலாமாம்

அகலமாகத் திறந்து விடப்படும் தனியார் மயக் கொள்ளை


புதுடில்லி,ஆக.20, தனியார் ரயில் களை இயக்கம் நிறுவனங்களே ரயிலின் நிறுத்தங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் 109 வழித் தடங்களில் 150 ரயில்கள் இயக்கத் தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு தனியார் ரயில் போக்கு வரத்தை தொடங்க திட்டமிடப்பட் டுள்ள நிலையில் பாம்பார்டியர், ஆல்ஸ்ட்டான், சிமென்ஸ் உள் ளிட்ட 23 நிறுவனங்கள் இதற்க்கு விருப்பம் தெரிவித்துள்ளன.


பயணக் கட்டணங்களே நிறு வனங்களே தேவைக்கு ஏற்ப தீர் மானித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எந்தெந்த நிறுத்தங்களில் ரயில் நின்று செல்வது என்பதை நிறுவ னங்களே தீர்மானித்துக் கொள்ள லாம் என்றும் அந்த தடத்தில் செல்லும் அதிவிரைவு ரயிலின் நிறுத்தங்களை விட எண்ணிக்கை மிகாமல் இருக்க வேண்டும் என்றும் விதிகளில் குறிப்பிட்டுள்ளது.


நிறுத்தங்களில் பட்டியலை முன்கூட்டியே ரயில்வே துறையிடம் கொடுக்க வேண்டும் என்றும்; ஓராண்டுக்கு அது நடைமுறையில் இருக்கும் என்றும் குறிப்பிட் டுள்ளது.


 


No comments:

Post a Comment