தி.மு.க.  முன்னாள் அமைச்சர் ரகுமான்கானுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 20, 2020

தி.மு.க.  முன்னாள் அமைச்சர் ரகுமான்கானுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்!


தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் சிறந்த பேச்சாளரகளில் ஒருவருமான நண்பர் ரகுமான்கான் அவர்கள் சென்னையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தோம்.


கலைஞர் காலந்தொட்டே திராவிட இயக்கக் கொள்கையாளராகவும் மாணவர் கழகத்தில் இருந்து, தி.மு.க.வின் துடிப்பு மிகுந்த பேச்சாளரா கவும். தி.மு.க.வின் தலைமை செய்தித் தொடர்பாளராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், தி.மு.க. அமைச்சரவையில் தொழிலா ளர் துறை அமைச்சராகவும் இருந்தவர். சட்டமன்றத்தில் சுறு சுறுப்புடன் பணியாற்றி முத்திரை பதித்தவர்; முத்தமிழ் அறிஞர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் நீங்காத பற்றும், விசுவாசமும் கொண்டவர்.


‘விடுதலை'யின் தொடர் வாசகர். தந்தை பெரியாரிடமும், திராவிடர் கழகத்தினரிடமும் அன்பு கொண்டவர்.


அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


 


 


(கி.வீரமணி)


தலைவர்


திராவிடர் கழகம்.


சென்னை 


20.8.2020 


No comments:

Post a Comment