தமிழகம் முழுவதும் கட்டட வழிகாட்டி மதிப்பீடு 20 விழுக்காடு உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 23, 2020

தமிழகம் முழுவதும் கட்டட வழிகாட்டி மதிப்பீடு 20 விழுக்காடு உயர்வு

சென்னை, ஆக. 23- தமிழகம் முழுவதும் கட்டடங்களுக்கு வாடகை நிர்ணயம் மற்றும் கட்டடத்துடன் செய்யப் படும் பத்திரப் பதிவு ஆகிய வற்றுக்கான கட்டட வழி காட்டி மதிப்பீடு 20 விழுக் காடு வரை உயர்த்தப்பட்டுள் ளது.


கட்டடத்துக்கான வழி காட்டி மதிப்பு பொதுப் பணித்துறை தலைமை பொறி யாளரால் ஆண்டுதோறும் நிர்ணயித்து வெளியிடப்படு கிறது. இந்நிலையில், இன்னும் ஓராண்டுக்கான மதிப்பீட்டை பொதுப்பணித் துறை கட்ட டப் பிரிவு தலைமை பொறி யாளர் எம்.ராஜமோகன் வெளியிட்டுள்ளார். இது கடந்த 16ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர் பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டுள் ளதாவது:


இந்த வழிகாட்டி மதிப்பு, நிலத்துக்கானது அல்ல. கட் டடங்களுக்கு மட்டுமானது. சென்னை மாநகராட்சி மற் றும் 32 கி.மீ. சுற்றளவு வரை 15 வகையிலான கட்டடங்க ளுக்கான மதிப்பில் 20 சத வீதம் அதிகரிக்கப்பட்டுள் ளது. அதேபோல, கோவை, ஈரோடு, திருப்பூர் மாநக ராட்சி பகுதிகளில் 15 வகை கட்டடங்களுக்கு 15 சதவீத மும், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், தஞ்சை, திண்டுக்கல் மாநகராட்சிகள், நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங் களில் கட்டிடங்களுக்கு 10 சதவீதமும், அனைத்து நக ராட்சி பகுதிகளிலும் உள்ள கட்டிடங்களுக்கு 5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.


சுமைதாங்கி கட்டுமான அமைப்பில், தேக்குமரம் பயன்படுத்தப்படும் கட்டட வகையில், கான்கிரீட் தளத் துடன் கூடிய தரைதளத்துக்கு சதுர மீட்டருக்கு அதிகபட்ச மாக ரூ.8,980, முதல்தளத்துக்கு ரூ.8,325, 2ஆம் தளத்துக்கு ரூ.8,425, அடுத்தடுத்த தளத் துக்கு 2ஆம் தள தொகை யுடன் ரூ.127.90 கூடுதலாக சேர்க்க வேண்டும்.


மரம் மற்றும் செங்கல் (‘மெட்ராஸ் டெரஸ்’) மேல் தளம் கொண்ட 40 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தின் தரை தளத் துக்கான மதிப்பு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.8,125 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தளத்துக்கு ரூ.7,470, 2ஆம் தளத்துக்கு ரூ.7,830, அதற்கு மேல் உள்ள தளங் களுக்கு சதுர மீட்டருக்கு கூடுதல் கட்டணமாக ரூ.127 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு அந்த அறிவிப் பா ணையில் கூறப்பட்டுள்ளது


No comments:

Post a Comment