புதுடில்லி, ஆக. 23- கரோனா காரணமாக இலட்சக்கணக் கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மாத வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்துவதில் மிகுந்த சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் இஎஸ்அய் காப்பீட்டுக் கழகத்தில் உறுப்பினர்களாக இருக்கும்பட்சத்தில், மூன்று மாதங்களுக்கு 50 விழுக்காடு ஊதியம் முன்பணமாக வழங் கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக, ‘வேலையின்மை படி’க்கான விதிமுறைகளை அது தளர்த் தியுள்ளது. இதன்மூலம், ஊர டங்கு தொடங்கிய மார்ச் 24 முதல், 3 மாதங்களுக்கான அதாவது 90 நாட்களுக்கான வேலையின்மை படியை பெறு வதற்கு, இந்த ஊழியர்கள் பெறத் தகுதி உடையவர்கள் ஆவார்கள். இதன் மூலம், 35 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.
பணம் பெறுவதற்கான தகுதிகளாகக் கூறப்பட்டுள்ள தாவது, இஎஸ்அய் திட்டத் தில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை 2 ஆண்டுக்கு இஎஸ்அய் காப்பீடு திட்டத்தில் இணைந் திருக்க வேண்டும். 2019ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் 78 நாட்களுக்கு குறையாமல் பங்களித்திருக்க வேண்டும். 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மீதமுள்ள 6 மாத பங்களிப்பு காலங்களில் குறைந்தபட்சம், 78 நாட்க ளுக்கான பங்களிப்பை வழங் கியிருக்க வேண்டும். இவ் வாறு கூறப்பட்டுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment