சென்னை,ஆக.5, தமிழக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: உயர்கல்வித் துறை யின்கீழ் செயல்பட்டுவரும் 51 அரசு பலவகை தொழில்நுட்பக் கல் லூரிகள் மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டி லும் தொழில்நுட்பக் கல்வி துறையின் கல்விப் பாடத் திட்டத் திலும் வரக்கூடிய 3 இணைப்புக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கான முதலாம் ஆண்டு பட்டயப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 20 ஜூலை ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 16,940 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இணையதளத்தில் விண்ணப் பிக்கக் கடைசி நாளாக ஆகஸ்ட் 4ஆம் தேதி என அறிவிக்கப்பட் டிருந்தது. தற்போது முதலாம் ஆண்டு டிப்ளோமா படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் சான்றிதழ் பதிவு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.
No comments:
Post a Comment