பிரான்சில் குளிர்காலத்தில் கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அறிவியலாளர்கள் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 5, 2020

பிரான்சில் குளிர்காலத்தில் கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அறிவியலாளர்கள் தகவல்


பிரான்சு, ஆக.5 பிரான்சில் குளிர் காலத்தில் கரோனாவின் இரண் டாம் கட்டப் பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிவிய லாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து பிரான்சு அறிவிய லாளர்கள் தரப்பில், பிரான்சில் குளிர்காலத்தில் இரண்டாம் கட்டப் பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்பெயினில் ஏற் பட்ட நிலை உண்டாகலாம். சமூக இடைவெளியை மக்கள் பின்பற் றாமல் இருந்தால் கோடைக் காலத்திலும் கரோனா பரவல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரான்சில் ஊரடங்கு விதிக் கப்பட்ட பிறகு கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வந்த பிறகு கரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கரோனா பாதிப்பி லிருந்து மெதுவாக மீண்டு வரும் பிரான்ஸ் ஊரடங்கை நீக்கி அதன் வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியுள்ளது.


ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளைப் போல கரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸும் கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளனர்.


தற்போது பொருளாதாரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கையில் அந் நாட்டு அரசு தீவிரமாகச் செயல் பட்டு வருகிறது.


கரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் 1,91,295 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 30,294 பேர் பலி யாகி உள்ளனர்.


No comments:

Post a Comment