புதுடில்லி, ஆக. 21 உலக அளவில் அதிவேகமாக கரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 29,05,824 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த
24 மணி நேரத்தில் 68,898 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 983 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54,849 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.9 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 74.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment