பெரியகுளம் குஜராத்திலா இருக்கிறது மார்வாடிகள் ராஜ்ஜியமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 16, 2020

பெரியகுளம் குஜராத்திலா இருக்கிறது மார்வாடிகள் ராஜ்ஜியமா

பெரியகுளம் குஜராத்திலா இருக்கிறது?


மார்வாடிகள் ராஜ்ஜியமா?


விநாய தீர்த்தங்கர் உயிர் விட்ட நாளை மார்வாடிகள் 10 நாள்கள் உபவாசம் (பட்டினி) இருந்து கொண்டாடுவார்கள். இது வடக்கே உள்ள மார்வாடிகள் கொண்டாடும் வழக்கம் உண்டு.


அரசனை விஞ்சிய விசுவாசியாக தமிழ்நாட்டிலும் இதனையொட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் 10 நாள்களுக்கு (15.8.2020 முதல்) இறைச்சிக் கூடங்கள் திறக்கக்  கூடாது என்று சுற்றறிக்கை விடப்பட்டு உள்ளது.



மார்வாடிகள் இந்துக்கள் அல்ல, அவர்கள் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள், ஜெயினர்கள் விநாயகரை தீர்த்தங்கராக நினைத்து வழிபடுகிறார்கள். அந்த தீர்த்தங்கர் தியானமேற்று முக்தி அடைந்த நாளை  ‘‘புருசன் பருவா” என்று அழைப்பார்கள். விநாயக தீர்த்தங்கர் 10 நாட்கள் உபவாசமிருந்து உயிர்விட்டார்.  ஆகையால் 10 நாள்கள் மார்வாடிகள் உபவாசம் இருப்பார்கள். அதற்காக நம்மையும் இறைச்சி சாப்பிடாதே என்று கூறுவதற்கு பெரியகுளம் என்ன குஜராத்திலா உள்ளது?


குறிப்பு: எதிர்ப்பின் காரணமாக சுற்றறிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.


No comments:

Post a Comment