தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் புதிய வாகனங்கள் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 5, 2020

தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் புதிய வாகனங்கள் அறிமுகம்

சென்னை, ஆக.5- இந்தியாவில்விருதுகள்-வென்ற எப்.சி.ஏ. ஜீப் கேம்பஸ்  3 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நைட் ஈகிள் என்ற புதிய வாகனத்தை அறிமுக படுத்தியுள்ளது.    வாடிக்கையாளர்கள் தனி மனித இடை வெளியை   பேண உதவி டும் வகையில் ஜீப் கேம்பஸ் நைட் ஈகிள்    250 யூனிட்டு களை மட்டுமே நாங்கள் உற்பத்தி செய்ய வுள்ளோம். இதற்கான இணைய தள முன்பதிவுகள் துவக்கப் பட்டுள்ளன.


 இந்த ஜீப் கேம்பஸ் இந்தியசாலைகளில் அறிமுகம் செய்யப் பட்ட முதல் இரண்டு ஆண்டுகளில் 40 க்கும் மேற்பட்ட விருது களைப் பெற்றுள்ளது  என இந்நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் பார்த்தாதத்தா  தெரிவித்துள்ளார்.


பெருந்தொற்றுக் காலத்தில் விவசாயத்திற்கான


வாகன விற்பனை அதிகரிப்பு


சென்னை, ஆக. 5- இந்தியாவின் முன்னணி டிராக்டர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும், ஏற்றுமதி சந்தையில் நெ.1 நிறுவனமாகவும் உள்ள சோனாலிகா டிராக்டர், கடந்த மாதத்தில் இன்னொரு சாதனை படைத்துள்ளது. உள்நாட்டு சந்தையில், இதுவரை எப்போதுமில்லாத அளவாக, நடப்பு 2020 ஜூலையில் இது 71.7% விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதோடு, ஏற்றுமதியையும் சேர்த்த ஒட்டுமொத்த விற்பனையில் 10 ஆயிரத்து 223 டிராக்டர்கள் விற்பனை என்ற உச்ச எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.


தற்போது பரவலாக நிலவி வரும் பெருந்தொற்று முடக்க பாதிப்புள்ள பொருளாதாரச் சூழலிலும், கடந்த 2020 மே மாதத்தில் விற்பனையான டிராக்டர்களை டெலிவரி  செய்துள்ளோம். அந்த ரீதியில் 25 சதவீத வளர்ச்சி  கண்டுள்ளோம். அடுத்து வந்த ஜூனில் 55%, ஜூலையில் 71.7% விற்பனையில் வளர்ச்சி காணப்பட்டுள்ளது என இக்குழுமத்தின் செயல் இயக்குனர் மன் மிட்டல்  தெரிவித்துள்ளார்.


செவிலியர் உடலைப் புதைக்க இடையூறு


செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு


இராணிப்பேட்டை,ஆக.5, ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் செவிலியர், கொரோனாவால் உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து நவல்பூர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட் டத்தில், உடலைப் புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதனால், பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உடலை அடக்கம் செய்தனர். இந்த நிலையில்,  செவிலியர் உடலைப் புதைக்க இடையூறு செய்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்  பேரில் இந்த வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.


இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்- திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு



திருவாரூர், ஆக. 5- திருவாரூ ரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழக இறுதியாண்டு  மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப் படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,


கரோனா  காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஏற் கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த உத்த ரவு திரும்பப்பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது, அதேபோல அவர்கள் வெற்றி பெறாத பாடங்களுக்கான (அரியர்) தேர்வுகளும் நடைபெறும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அறிவித்துள்ளது.


மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு காரண மாகத் தேர்வு நடத்தப்படுவதாகவும், ஆன்லைன் முறையில் தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள்,  சகஜ நிலை திரும்பியபின் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் என்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment