புதுடில்லி, ஆக.10 பண மதிப் பிழப்பு, ஜி.எஸ்.டி. தவறான அம லாக்கம், ஊரடங்கு ஆகிய மோடி அரசின் 3 தவறுகள், பொருளாதாரக் கட்டமைப்பை அழித்து விட்டன என்று ராகுல்காந்தி குற்றம் சாட் டினார்.
இளைஞர் காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி, வேலைவாய்ப் பின்மை குறித்து இளைஞர்கள் குரல் எழுப்புவதற்காக, ரோஜ்கார்டு என்ற ஆன்லைன் பிரச்சாரத்தை இளைஞர் காங்கிரஸ் தொடங்கி உள்ளது.
அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மோடி பிரதமராக பதவி ஏற்றபோது, ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு அளிப்ப தாகக் கூறினார். அவர் காற்றை விற் பனை செய்தார். ஆனால், உண்மை யில் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளால் 14 கோடி இளை ஞர்கள் வேலை இழந்துள்ளனர்.
தவறான கொள்கைகளே இதற்கு காரணம். பண மதிப்பிழப்பு, தவறாக ஜி.எஸ்.டி.யை அமல்படுத் தியது, பொது முடக்கம் ஆகிய
3 தவறுகள், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை அழித்து விட்டன. இளைஞர்களுக்கு இந்தியாவால் வேலைவாய்ப்பு அளிக்க முடியாது என்பதுதான் இன்றைய உண்மை.
இளைஞர் காங்கிரசுக்கு நிறுவன தின வாழ்த்துகள். எல்லோரும் இந்த பிரசாரத்தில் இணைந்து, வேலை வாய்ப்புக்காக குரல் கொடுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment