ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை அகழாய்வு 3000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 13, 2020

ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை அகழாய்வு 3000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுப்பு


தூத்துக்குடி,ஆக.13- தூத்துக் குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் உலக நாகரீ கத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.


ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய பகுதிகளில் தமிழக அரசு சார்பில் அக ழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொல்லியல் துறை இயக்குநர் பாஸ்கர், ஆய்வா ளர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் அகழாய் வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஏராள மான முதுமக்கள் தாழிகள், மண்பாண்டப் பொருட்கள், இரும்பு மற்றும் வெண்கலத் தாலான பொருட்கள் போன் றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.


ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகில், கால்வாய் ரோடு, ஆதிச்சநல்லூர் கிரா மம் ஆகிய பகுதிகளில் பள் ளங்களைத் தோண்டி, தொல் லியல் துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர். கடந்த 11.8.2020 அன்று மட்டும் 7 முதுமக்கள் தாழிகள் கண் டெடுக்கப்பட்டன.


இந்நிலையில், நேற்று (ஆக.12) நடைபெற்ற ஆய்வில் 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் மற்றும் கூரை ஓடுகள் இங்கு கிடைத்துள் ளன. அந்தக்குறியீடுகளில் ஏணி, இலை போன்று வரையப்பட் டுள்ளது. கீறல்கள் மற்றும் குறியீடுகளை ஆய்வு செய்யும் போது பழங்கால மனிதர்க ளின் வாழ்வியல் குறித்த முக் கியத் தகவல்கள் கிடைக்கப் பெறும் என்று அதிகாரிகள் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment