'ஜெய்சிறீராம்' கூற மறுத்தவர்மீது இந்துத்துவா வெறித்தாக்குதல்: இருவர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 13, 2020

'ஜெய்சிறீராம்' கூற மறுத்தவர்மீது இந்துத்துவா வெறித்தாக்குதல்: இருவர் கைது

ஜெய்ப்பூர், ஆக. 13- ராஜஸ்தா னில் ஜெய்சிறீராம் சொல்லு மாறு முதியவரைத் தாக்கிய இந்துத்துவா வன்முறையா ளர்கள் இருவர் கைது செய் யப்பட்டனர்.


ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரான கப்பர் அஹ்மத் கச்சவா (வயது 54) என்பவரை இருவர் வழிமறித்து “ஜெய்சிறீராம், மோடி ஜிந்தாபாத்” என்று கூறச் சொல்லுமாறு கட்டாயப்படுத்தித் தாக்கியுள் ளனர். ஆட்டோ ஓட்டுநர் கச்சாவா காவல்துறையினரி டம் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


முதியவரைத் தாக்கிய ஷம் புடயல் ஜாட் (35), ராஜேந்திர ஜாட் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். காவல்துறை அதிகாரி புஷ்பேந்திர சிங்  கூறுகையில், அவர்கள் இரு வரும் அப்பகுதியில் உள்ள பூங்காவில் வாகனத்தை நிறுத் திவிட்டு, மது அருந்திவிட்டு, அவ்வழியாக வந்த கச்சாவை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ள னர்” என்றார்.


No comments:

Post a Comment