டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், தனக்கு அடுத்த துணை அதிபர் பதவி வேட்பாளராக ஆப்பிரிக்க - இந்திய வம்சாவளி கருப்பின அமெரிக்கரான கமலா ஹாரிஸை நியமித்துள்ளார்.
- பத்து மாநில முதல்வர்களுடனான உரையாடலில் பிரதமர் மோடி கரோனா தடுப்பு பற்றி பேசியது சிறப்பானது. ஆனால், மாநிலங்களுக்கு உரிய நிதியை அளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:
- அவசர நிலைப் பிரகடனத்தின்போதும் அதற்கு முன்னரும் உச்சநீதிமன்றம் செயலாற்றியது போல், தற்போது சர்வாதிகார மும், மதவெறி போக்கும் அதிகரித்துள்ள நிலையில், அமைதி யாகக் கடந்து செல்லக் கூடாது என வரலாற்றாசிரியர் ராமசந்திர குகா தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- புதிய கல்விக் கொள்கையில் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி எதுவும் கூறவில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கவுரவ் வல்லப் தனது கட்டுரையில் தெரிவித்து உள்ளார்.
தி இந்து, டில்லிப் பதிப்பு:
- சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
- அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளிப் பெண் கமலா ஹாரிஸ் குறித்து, வலதுசாரி அமைப்புகள் மவுனம் காக்கின்றன. செனட்டராக கமலா ஹாரிஸ், காஷ்மீர் பிரச்சினை குறித்தும், மனித உரிமை மீறல் குறித்தும், கடுமையான விமர் சனங்களைப் பதிவிட்டவர் என்பது காரணமாக இருக்கலாம் என பத்திரிக்கையாளர் அனிதா ஜோசுவா 'தி டெலிகிராப்' பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளார்.
- குடந்தை கருணா
13.8.2020
No comments:
Post a Comment