தீமையைச் செய்தவன் மன்னிப்புப் பெற்றோ, தண்டனை அடைந்தோ, தன் செய்கைக்குப் பரிகாரம் பெற்றுக் கொள்ளுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். தீமையை அடைந்தவனுக்கு இந்தக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார் என்பது விளங்கவில்லை. தீமையை அடைகின்ற மனிதன் கடவுள் சித்தத்தால்தான் தீமை அடைகிறான் என்றுதானே சொல்ல வேண்டும்? அப்படியில்லாவிட்டால், கடவுளின் காவலைமீறி, ஒரு மனி தனுக்கு ஒரு மனிதன் தீமை செய்துவிட முடியுமா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 09.07.1949
‘மணியோசை’
No comments:
Post a Comment