திருச்சி ரயில்வே பணிமனையில் 450 வடமாநிலத்தவர்க்கு பணிஆணை
300-க்கும் மேற்பட்ட வட நாட்டவர்களுக்கு இ-பாஸ் கொடுத்தது யார்..?
திருச்சி,ஆக.11 திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வட மாநிலத் தவர்கள் 300- க்கும் அதிகமானோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேற்று வந்தனர். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் திருச்சி பொன்மலைக்குள் இத்தனை வடமாநிலத் தவர்கள் எப்படி வந்தார்கள்,..?
ரயில்கள் ஓடவில்லை, பேருந்துகள் இயங்க வில்லை, இவர்களுக்கு எதனடிப்படையில் இ-பாஸ் கொடுக்கப் பட்டது போன்ற கேள்விகளோடு பொன் மலை ரயில்வே முன்னாள் ஊழியர்களின் வாரிசு களும், கடந்த பல ஆண்டுகளாக பணிமனையில் அப் ரண்டிஸ் முடித்து விட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருப்போரும் ஆர்மரிகேட் மற்றும் சான்றி தழ் சரிபார்க்கும் திருமண கூடத்திற்கு முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது போன்ற ரயில்வே நிர்வாகத் தின் நடவடிக் கைகள், தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கூறி அப்ரண்டிஸ் முடித்தவர்கள் பணிமனை எதிரே ‘தர்ணா'விலும் ஈடு பட்டனர்.
ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தமிழர்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது.
கரோனா பாதிப்பால் தமிழகத்தில் 7- ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலை யில், தமிழ் நாட்டில் அண்டை மாவட்டங்களுக் குச் செல்ல இ-பாஸ் கிடைக்காமல் மக்கள் அவ திப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வட மாநிலங்களில் இருந்து 300- க்கும் மேற்பட்டோர் எப்படி வந்தார்கள் என்று கேள்வி கேட்டால் காவல் துறையினரும் பதில் சொல்ல முடியாமல் விழிக்கின்றனர்.
அவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டனரா என்ற கேள்விக்கும் விடையில்லை.
மருத்துவத்திற்குச் செல்ல வேண் டும் என இ-பாஸ் கோரி மனு செய் தாலும், தொடர்ந்து ‘ரிஜக்ட்' என்றே வருகின்ற நிலையில் வடமாநிலத்தவர் கள் 300- க்கும் மேற்பட்டோருக்கு எப்படி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இ-பாஸ் கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரையிலும் பதில் இல்லை!
No comments:
Post a Comment