கேரளா ஆர்.எஸ்.எஸ். தொண்டர்  படுகொலை  வழக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 9   பேருக்கு ஆயுள் தண்டனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 11, 2020

கேரளா ஆர்.எஸ்.எஸ். தொண்டர்  படுகொலை  வழக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 9   பேருக்கு ஆயுள் தண்டனை

திருவனந்தபுரம், ஆக.11 கேர ளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண் டர் கடவூர் ஜெயன் படு கொலை வழக்கில் ஆர்.எஸ். எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொல்லம் நீதி மன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


2012- ஆம் ஆண்டு  கட வூர் ஜெயன் என்ற ஆர்.எஸ். எஸ். தொண்டர் படு கொலை செய்யப்பட் டார். ஜெயனின் உடலில் 50 இடங்களில் வெட் டுக்காயங்கள் இருந்தன.


கடவூர் ஜெயன் படு கொலைச் சம்பவம் கேர ளாவில் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இப்படுகொலை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.


ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தில் இருந்து ஜெகன் விலகி யதால் அவர் படுகொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் வினோத், கோபக்குமார், சுப்பிரமணி, பிரியராஜ், பிரணவ், அருண் உள்ளிட்ட 9 பேருக்கு கொல்லம் கூடு தல் குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.


இதனை எதிர்த்து 9 பேரும் கேரளா உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதனை யடுத்து இவ்வழக்கு கொல் லம் குற்றவியல் நீதிமன்றத் துக்கு மாற்றப்பட்டது.


தற்போது இந்த 9 பேருக் கான ஆயுள் தண்டனையை கொல்லம் முதன்மை குற்ற வியல் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது. அத்துடன் 9 பேருக்கும் தலா ரூ71,500 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.  இந்தத் தீர்ப்பின் மூலம் ஆர். எஸ்.எஸ். எத்தகைய பயங்கர வாத அமைப்பு என்பது உறு திப்பட்டிருப்பதாக சமூக ஊடங்களில் பலரும் கருத்து களைப் பகிர்ந்து வருகின்ற னர்.


No comments:

Post a Comment