தஞ்சை கவுரி அம்மாள் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 11, 2020

தஞ்சை கவுரி அம்மாள் படத்திறப்பு


பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை புலவர் அமர்சிங் அவர்களின் வாழ்விணையர் கவுரி அம்மாள் 1.8.2020 அன்று மறைவுற்றார். மறைந்த கவுரி அம்மையார் அவர்களின் படத்திறப்பு தஞ்சாவூர் பிலோமினா நகரில் அவருடைய இல்லத்தில் 10.08.2020 அன்று முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்றது.


தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித்து நினைவுரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் படத்தினை திறந்து வைத்து நினைவுரையாற்றினார். தஞ்சை மாநகரச் செயலாளர் சு.முருகேசன், மாவட்டத் துணைச் செயலாளர் ச.சந்துரு, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் செ.ஏகாம்பரம், சுந்தரபெருமாள் கோவில் கவுன்சிலர் அன்பழகன் ஆகியோர் நினைவுரையாற்றினர். மருமகன் தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் க.அரங்கராசன், மகள் அருளரசி, பேரன்கள் இனியன், எழிலன், போட்டோ மூர்த்தி  உள்ளிட்ட நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment