மருத்துவக் கல்வியில் மத்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்த ஆண்டிலேயே  இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 5, 2020

மருத்துவக் கல்வியில் மத்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இந்த ஆண்டிலேயே  இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு



புதுடில்லி,ஆக.5 மருத்துவக் கல்வியில் மத்தியத் தொகுப் பில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு இந்த ஆண்டிலேயே இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள் ளது.


அதன் விவரம் வருமாறு:


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பு களில் 15 விழுக்காடு இடங் களும், மருத்துவ மேற்படிப் புகளில் 50 விழுக்காடு இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட் டுக்காக மத்தியத் தொகுப்புக்கு வழங்கப் படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற் றுள்ளது. இதுதொடர்பாக திராவிடர் கழகம், திமுக, அதிமுக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடு தலை சிறுத்தைகள் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குகள் தொடரப் பட்டன.


இந்த வழக்கில் அண்மை யில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று நீதிபதி கள் தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக் கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறினர்.


ஓபிசிக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தர உச்சநீதி மன்றம்தான் முடிவு செய்யும் என்ற மருத்துவ கவுன்சில் விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவப் படிப் புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலை யில், ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத் தில் நேற்று (4.8.2020) மேல் முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், நடப் பாண்டே 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.


 


No comments:

Post a Comment