கோவை சுந்தராபுரம் தந்தை பெரியார் சிலைக்குக் காவிச் சாயம் பூசி, இப்பொழுது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் தள்ளப்பட்டுள்ள ஆசாமிக்கு, பி.ஜே.பி.யின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ரூ.50 ஆயிரம் தியாக நிதியாம்.
புரிகிறதா?
பெரியாரை அவமதித்தால் பரிசாம் - இனி பரிசு பெறுவோர் தொகை அதிகரிக்கப் போகிறது.
ஆக, பா.ஜ.க., சங் பரிவார்க் கும்பல் கலவரத்தைத் தூண்ட திட்டம் வகுத்திருப்பது நன்றாகவே புரிகிறது!
ஆவணங்கள் காணவில்லையாம்!
வங்கியில் ரூ.9,000 கோடி கடன் வாங்கி வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற வழக்கு நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மல்லையா வழக்குத் தொடர்பான ஆவணங்கள் காணவில்லையாம் - மாயமாகி விட்டதாம்!
வெளிநாடு தப்பி செல்ல உதவியது, இப்பொழுது வழக்குத் தொடர்பான ஆவணங்கள் காணவில்லை என்பதெல்லாம் எதைக் காட்டுகின்றன? இதில் பின்னணியில் இருப்பது யார்? மோடி அரசுக்கே வெளிச்சம்!
பா.ஜ.க.வில் இணைவோர் யார்?
6 படுகொலைகள் உள்பட 35 வழக்குகள், ஆறு முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த ஒரு ரவுடி பா.ஜ.க.வில் இணைந்தார்.
பா.ஜ.க. வளர்கிறது - வளர்கிறது - தமிழ்நாட்டில் இப்படித்தான்.
இப்படி இணைந்தவர்கள் கட்சிக்காக எவற்றை எல்லாம் செய்வார்கள்?
நம்புங்கள் - நம்பித் தொலையுங்கள் பா.ஜ.க. தார்மீகப் பண்புகள் நிறைந்த கட்சி??
No comments:
Post a Comment