தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஆக.17, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் 32 மருத்துவர்களும், கரோனா நோய் அறி குறியுடன் வந்த 15 மருத்துவர்களும் உயிரிழந் துள்ளார்கள் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தற்போது அதி காரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இச்சங்கத் தின் தமிழகத் துணைத் தலைவராக இருந்த இராஜபாளையத்தைச் சேர்ந்த ஜி.கோதண்ட ராமன் என்ற மருத்துவரே கரோனா நோய்த் தொற்றால், 35 நாட்கள் போராடி, பிறகு உயிரி ழந்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுக்கு 43 மருத் துவர்கள் தமிழகத்தில் இறந்துள்ளார்கள் என்று ஏற்கெனவே இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்தபோது, அதை எள்ளி நகையாடியவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர். அது ஆதாரமற்றது; வதந்தி என்று பத்திரிகையாளர் பேட்டியில், அதுவும் துறை யின் செயலாளரை அருகில் வைத்துக் கொண்டு, தன் நெஞ்சறிந்தே அப்பட்டமாகப் பொய் சொன்னவர். இப்போது அடுத்து என்ன மாதிரியான பொய் சொல்லப் போகிறார் விஜயபாஸ்கர்?. இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழகக் கிளையே கரோனா மற்றும் அந்த அறிகுறியுடன் வந்து இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 47 என்று கணக்கை வெளியிட்டுள்ள நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரிடம் உள்ள மருத்துவர்கள் இறப்புக் கணக்கு எத்தனை?
ஆகவே, மரணத்தை மறைக்காதீர்கள்; அது கொடுமையிலும் மாபாதகக் கொடுமை; உயிர்த் தியாகம் செய்த மருத்துவர்களின் மரணத்தை, பச்சைப் பொய்களின் மூலம் கொச்சைப்படுத்தும் மனிதநேயமற்ற செய லாகும்.
இதுவரை இறந்து போன மருத்துவர் களுக்கு ஏற்கெனவே அறிவித்த 50 லட்சம் ரூபாய் நிதி, அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை இரண்டையும் தாமதமின்றி வழங்குங்கள்.
அதுவே மக்களைப் பாதுகாக்கும் மகத் தான பணியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மருத்துவர்களுக்கு இந்த அரசு செலுத் துகின்ற நன்றிக்கடனாக இருக்கும்!
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment