மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 58 ஆக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 17, 2020

மூணாறு நிலச்சரிவில் உயிரிழப்பு 58 ஆக உயர்வு

திருவனந்தபுரம், ஆக.17 மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடி யில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல் களை தேடும் பணி நேற்றும் 10ஆவது நாளாக தொடர்ந்தது. இதில், நேற்று நடத்தப்பட்ட தேடுதலில் 2 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் முத்துலட்சுமி (22) மற்றும் சின்னத்தாய் (62) என தெரிய வந்தது. இதன் மூலம், இதுவரை நிலச்சரிவில் பலியான வர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 12 பேர் உடல்களை தேடும் பணி இன்றும் தொடரும் என்று மீட்புப் படையினர் தெரிவித்தனர்.


டில்லியில் நாடாளுமன்றக் கட்டடத்தில் : தீ விபத்து 


புதுடில்லி,ஆக.17, புதுடில்லியில் நாடாளுமன்ற வளா கத்தில் உள்ள இணைப்புக் கட்டடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. நாடாளுமன்றத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த இணைப்புக் கட்டடத்தின் 6ஆவது மாடியில் இந்த தீ விபத்து நேரிட்டது.  விபத்து குறித்து தகவல் அறிந்த டில்லி தீயணைப்புத் துறையினர் 7 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீ  கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீவிரமாகப் போராடிய தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்து நிறுத்தினர்.


இந்த தீ விபத்தில் ஏராளமான கணினிகள், மேசை நாற்காலிகள், ஆவணங்கள் கருகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்கசிவு காரணமாக விபத்து நேரிட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கான பணிகள் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ விபத்து ஏற்பட்ட கட்டத்தில்தான் முக்கியமான கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடப்பது வழக்கம் என்பது குறிப் பிடத்தக்கது.


No comments:

Post a Comment