6 நாள்கள் தொடர் சொற்பொழிவு ஆக.18ஆம் தேதி மாலை தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 15, 2020

6 நாள்கள் தொடர் சொற்பொழிவு ஆக.18ஆம் தேதி மாலை தொடக்கம்

மூன்று நூற்றாண்டுகளில் சமூக நீதி - ஒரு வரலாற்றுப் பார்வை


தமிழர் தலைவர்  சிறப்பு சொற்பொழிவு


சென்னை,ஆக.15- கரோனா தொற்று பரவல் தடுப்பு நட வடிக்கையாக மத்திய, மாநில அரசுகளால்  ஊரடங்கு மார்ச் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது  ஊரடங் குக்கான கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன் கடைப்பிடிக் கப்பட்டு வருகிறது. பேருந்து சேவை, ரயில் சேவை ஆகிய பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பன்னாட்டளவில் உள்ள தோழர்களை காணொலி


வாயிலாக  சந்தித்து கலந்துற வாடினார்.  அதன் தொடர்ச் சியாக காணொலி வாயிலாக பல்வேறு தலைப்புகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றி வருகிறார்.


ஆகஸ்ட் 18,20,22,26,28,29 ஆகிய ஆறு நாள்களும் மாலை 6.30 மணி முதல்  7.30மணிவரை மூன்று நூற்றாண்டுகளில் சமூக நீதி -ஒரு வரலாற்றுப் பார்வை எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். .


Zoom ID 85416994571இல்  password 388682  அறிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment