புதுடில்லி, ஆக.9 கரோனா பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அரசின் உதவியானது,நாட்டின் ஜிடிபி-யில் ஒரு சதவிகிதம் அளவிற்கே இருப்பதாகவும், பொருளாதாரத் தின் அழுத்தமான பகுதிகளுக்குக் கடனுதவிசென்றடையவில்லை என்றும் ரிசர்வ் வங்கியின் முன் னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
தற்போது சிகாகோ பல் கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும்ரகுராம் ராஜன், இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் வணிகங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் மதிப்பீட்டு நிறுவ னங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதற் குப் பதிலாக, பொருளாதாரத்தினை எப்படி பாதுகாப்பது என்பதில் தான் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.கரோனா நெருக்கடிக்கு பின்பு, நாங்கள் விரைவில் நிதிப் பொறுப்புக்குத் திரும்புவோம் என்று உள்நாட்டு மற்றும் பன் னாட்டு முதலீட்டாளர்களையும் நம்பவைப்பது முக்கியம். அர சாங்கம் இதனைஉறுதிசெய்ய வேண்டும். கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மார்ச் மாத இறுதியில் இருந்துஇரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தி யாவில் பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட் டது. எனினும் ஜூன் மாதத்தில் இருந்து கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்து சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டன. இது பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையைத் தூண்டியுள்ளது.
ஏழை மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ அர சாங்கம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஆனால் அர சாங்கத்தின் இந்த நடவடிக்கை மூலம் உண்மையான பண வெளி யேற்றம் என்று பார்த்தால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் வெறும் ஒரு சத விகிதம் என்ற அளவிற்கே உள் ளது.
கடந்த ஜூன் மாதத் தொடக்கத் தில் ‘மூடிஸ்’ நிறுவனம் இந்தியா வின் மதிப்பீட்டையும் கண் ணோட்டத்தையும் குறைத்தது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அதனைத் தொடர்ந்தே ‘பிட்ச்’ நிறுவனமும் அதன் பார்வையை மாற்றியது. ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கானவட்டி விகி தத்தைக் கடந்த ஆண்டு 135 அடிப் படை புள்ளிகளுக்கு மேல் குறைத் தது. இதேநடப்பு ஆண்டில் 115 அடிப்படைப் புள்ளிகளை குறைத் துள்ளது. ஆனால் பணவீக்க அழுத் தங்கள் அதிகரித்துள்ளதால், எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக முந்தைய விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் அடுத்துவரும் கூட்டங் களில் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறியுள்ளது.ரிசர்வ் வங்கி யும் அரசாங்கமும் நிச்சயமாக ஒத்துழைத்து வருகின்றன. ஆனால், அது வேறெங்கோ இருப் பது போல் தெரிகிறது. ஆனால் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறது. அது அரசாங் கத்தின் கையில்தான் உள்ளது.
பொருளாதாரத்தின் அழுத்த மான பகுதிகளைக் கடன் அடை கிறதா என்பதிலும், சாத்தியமான நிறுவனங்கள் கடனை அணுக முடிகிறதா? என்பதிலும் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கி அதன் கவனத்தை மையப்படுத்த வேண்டியது இங்கு தான் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இங்குள்ள வளங்கள் ரிசர்வ் வங்கிக்கு நன்றாகத் தெரியும். இன்று இந்தியாவில் வளங்கள் குறைவாகவே உள்ளன. இந்நிலையில், பொருளாதாரத் திறன்களை பாதுகாப்பதுதான் தற்போதைய நேரத்தில் இந்தியா செய்ய வேண்டிய வேலையாகும்.
இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment