தேசியக்கொடியை அவமதித்ததாக புகார்: நடிகர் எஸ்.வி.சேகர் கைதாவாரா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 14, 2020

தேசியக்கொடியை அவமதித்ததாக புகார்: நடிகர் எஸ்.வி.சேகர் கைதாவாரா

தேசியக்கொடியை அவமதித்ததாக புகார்: நடிகர் எஸ்.வி.சேகர் கைதாவாரா?


வழக்குப்பதிவு செய்து விசாரணை


சென்னை,  ஆக. 14- தேசியக் கொடியை அவமதித்ததாக கொடுக்கப்பட்ட புகார் அடிப் படையில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


சென்னை நுங்கம்பாக்கத் தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 40). தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் கூறி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த மனுவில், நடிகர் எஸ்.வி. சேகர், யூ-டியூப் சேனல் ஒன்றில் இந்திய தேசியக் கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்றும், அவர் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட் டிருந்தார். இந்த மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல் துறையினர்  நேற்று வழக்குப் பதிவு செய்தனர். தேசிய கொடியை அவமதித்ததாக அவர் மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். எஸ்.வி.சேகர்மீது கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் தன்னை பா.ஜ.க. கைவிட்டுவிட்டதாக புலம்புகிறாராம் அந்த நடிகர்.


No comments:

Post a Comment