ஆகஸ்டு 7: சமூகநீதிப் பிரகடனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 7, 2020

ஆகஸ்டு 7: சமூகநீதிப் பிரகடனம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க (ஆகஸ்டு 7) இந்த நாளில் தான், 1990 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர், சமூகநீதிக் காவலர் என தமிழர் தலைவரால் அழைக்கப்பட்ட வி.பி.சிங் அவர்கள், மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுப் பணி நியமனங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற சமூகநீதிப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.


அவ்வாறு அறிவிக்கும்போது, ‘‘அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், ராம் மனோகர் லோகியா ஆகியோரது கனவை நனவாக்கும் செயல் இது'' என பெருமிதத்தோடு குறிப்பிட்டார் வி.பி.சிங்.


27 சதவிகித ஆணைப் பிறப்பித்து முப்பது ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னமும் மத்திய அரசின் முதல் நிலைப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 10 விழுக்காடு அளவில்தான் உள்ளனர். செயலாளர் பதவிகளில் ஒருவர் கூட இல்லை. கிரிமிலேயர் எனும் பொருளாதார அளவுகோலை மேலும் திணித்து, இருக்கும் வாய்ப்பையும் பறிக்க முயல்கிறது மத்திய அரசு. பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக அமல் படுத்தவில்லை.


சமூகநீதி எனும் கோட்பாட்டை அடைந்திட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடவும், காப்பாற்றவும் இன்றைய நாளில் சூளுரைப்போம்.


No comments:

Post a Comment