ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 9, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல்,


அய்தராபாத் பதிப்பு:



  • அப்பளம் சாப்பிட்டால் கரோனா வராது என ‘பாப்ஜி அப்பளம்’ கம்பெனிக்கு விளம்பரம் செய்த மோடி அரசில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அர்ஜூன் ராம் மேக்வால், கரோனா தொற்று காரணமாக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


டெக்கான் கிரானிகல்,


சென்னைப் பதிப்பு:



  • அங்கன்வாடி மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்களது ஆஷா அமைப்பு இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்கிறது. கிட்டத்தட்ட ஆறு லட்சம் பணியாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு செவிசாய்க்காமல் மவுனமாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

  • புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்றுவதைத் தள்ளி வைத்து, நாடாளுமன்றத்தின் விவாதத்திற்கு உட் படுத்தி, மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதுகாத்தும், அனைத்து மக்களின் கல்விக்கும் வாய்ப்பு அளித்திடும் வகை யிலும் மறுவரைவு செய்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:



  • மோடி ஆட்சியில் தகவல் அறியும் ஆணையம், தேர்தல் ஆணையம், தேர்வு ஆணையம், நிதி ஆயோக், பொருளாதார ஆலோசகர் கவுன்சில், தலைமை பொருளாதார ஆலோசக அலுவலகம், தணிக்கைத் துறை என அனைத்து அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களும் முடக்கப்பட்டு, செயலற்று இருக்கின்றன என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

  • அயோத்தியில் ராமன் கோயில் பூமி பூஜை நடத்தியாகி விட்டது. இப்போதாவது, நடப்புக் காலத்திற்கு வந்து, நாட்டில் நிலவும் அவசரமான பிரச்சினைகளை பிரதமர் மோடி கவனிக்க வேண்டும் என மூத்த எழுத்தாளர் தல்வீன் சிங் தனது கட்டுரை யில் தெரிவித்துள்ளார்.


- குடந்தை கருணா


9.8.2020


No comments:

Post a Comment