கரோனா பரவலால் தட்டச்சுப் பள்ளிகளைத் திறக்க அனுமதி கிடையாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 9, 2020

கரோனா பரவலால் தட்டச்சுப் பள்ளிகளைத் திறக்க அனுமதி கிடையாது

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்



சென்னை, ஆக. 9- கரோனா பரவி வருவதால் தட்டச்சுப் பள்ளிகளைத் திறக்கத் தற் போது அனுமதி வழங்க முடி யாது என அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.


தமிழக தட்டச்சு, கணினி பயிற்சிப்பள்ளி சங்க மாநிலத் தலைவர் செந்தில், உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:


''கரோனா தொற்று கார ணமாக மார்ச் 25 முதல் அனைத்து தட்டச்சு, கணினிப் பயிற்சி பள்ளிகள் மூடப்பட் டன. இத்தொழிலில் சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் உள் ளன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள் ளன. ஆனால் தட்டச்சு, கம்ப் யூட்டர் பயிற்சிப் பள்ளிக ளைத் திறக்க அனுமதி வழங் கப்படவில்லை.


தட்டச்சுப் பயிற்சி மய்யங் களில் மாணவர்கள் குறைந்த நேரமே பயிற்சி பெறுகின்ற னர். ஒரு முறைக்கு 10 முதல் 15 மாணவர்கள் மட்டுமே வருகின்றனர். பலர் கடன் வாங்கிப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகின்றனர். பள்ளி களைத் திறக்காததால் கட னைக் கட்ட முடியாமல் வாழ் வாதார பாதிப்பு ஏற்பட்டுள் ளது.


பயிற்சி மய்யங்களைத் திறக்க அனுமதித்தால் கிருமி நாசினி பயன்படுத்துவது, சமூக இடைவெளியைப் பின் பற்றுவது, முகக்கவசம் அணி வது உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளையும் கண்டிப் பாகப் பின்பற்றுவோம் என உறுதியளிக்கிறோம். எனவே தமிழகத்தில் தட்டச்சு, கணினி  பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்''. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதிகள் சத் தியநாராயணன், ராஜமாணிக் கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ''தமி ழகத்தில் 2000-க்கும் அதிக தட்டச்சு பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. கரோனா பரவி வரும் சூழலில் தற்போது தட்டச்சு பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்க முடி யாது'’ எனத் தெரிவிக்கப்பட் டது.


மனுதாரர் தரப்பில், ''டாஸ் மாக் கடைளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள் ளது. உணவகங்கள், உடற் பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள் ளது, இதனால் தட்டச்சு பள் ளிகளையும் திறக்க அனு மதிக்க வேண்டும் ''எனக் கூறப் பட் டது.


இதையடுத்துத் தமிழகத் தலைமைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசார ணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


No comments:

Post a Comment