மன்னைப் பகுதியி லிருந்து சிங்கப்பூருக்கு பல ஆண்டுக்கு முன்பே சென்று, சிங்கப்பூரில் 'தமிழ் முரசு' ஏட்டினைப் பரப்பிய தமிழ்த் தொண் டறச் செம்மலும், திரா விடர் இயக்கப் பற்றாள ரும், கலைஞரிடத்திலும், நம்மிடத்திலும் மாறாத அன்பும் கொண்ட தோழர் பழனிவேலு அவர்கள் சிங்கப்பூரில் காலமானார் என்ற செய்தியை சில நண்பர்கள் மூலம் அறிந்து மிகவும் வருந்துகிறோம். துயருறுகிறோம்.
அவரது இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் கலைஞரும், நானும் கலந்து கொண்டுள்ளோம். சிங்கப்பூரில் பல ஆண்டுகளுக்கு முன் அவரது புதிய இல்லத்தைத் திறந்து வைத்த வாய்ப்பு அளித்து பெருமைப்படுத்தியவர்.
முதுபெரும் சிங்கப்பூர் திராவிட இயக்கப் பற்றா ளர்கள் - பெரியார் பற்றாளர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்.
அவருடைய குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவருக்கு நமது வீர வணக்கம்!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
9.8.2020
குறிப்பு: கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தோழர் பழனிவேலு அவர்களின் மருமகன் பாண்டியனிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment