அகமதாபாத், ஆக.6 குஜராத் மாநி லத்தில் கரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பரி தாபமாக பலியாகினர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனையில் கரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், கரோனா நோயாளி களுக்குச் சிகிச்சை அளித்து வரும் அந்த மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவெனக் கொழுந்து விட்டு எரிந்த தீ, அடுத்தடுத்த அறைகளுக்கும் பர வியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக் கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத் தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரி ழந்ததாக முதல் கட்டத் தகவல் வெளியானது.
நாடுமுழுவதும் இதுவரை 2.21 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை!
அய்சிஎம்ஆர்
புதுடில்லி,ஆக.6, இந்தியாவில் இது வரை 2.21 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று அய்சிஎம்ஆர் அறிவித்துள்ளது. இந்தி யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.64 லட்சம் கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என அய்சிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,64,536 ஆக உயர்வு; 40,699 பேர் பலி
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு
புதுடில்லி,ஆக.6, நாடுமுழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19லட்சத்து 64ஆயிரத்து 536 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகா தாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயி ரத்து 699 ஆகவும் கரோனாவால் பாதிக் கப்பட்டு சிகிச்சைப்பெற்று குணமான வர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 28 ஆயி ரத்து 336 ஆகவும் உயர்ந்துள்ளது. தற் போது சிகிச்சை பெறுபவர்கள் 5 லட்சத்து 95ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment