அய்.நா. தகவல்
பியொங்யங், ஆக.6, வடகொரியா தனது ஏவுகணைகளில் அணு ஆயுதத்தைப் பொருத்தும் வகையில் சிறிய கருவிகளை (devices) தயாரித்து வைத்துள்ளதாக அய்.நா. தெரிவித் துள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அண்மையில் இனி எந்த நாட்டுடனும் போர் கிடையாது என்று அறிவித்தார். வட கொரியாவின் பாதுகாப்பை அணு ஆயுதங்கள் உறுதி செய்வதால் இனி போருக்கான தேவை இருக்காது என்று அவர் கூறியிருந்த நிலையில், வட கொரியா அதன் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து வருவதாக அய்.நா. நிறுவ னத்தின் ரகசிய அறிக்கை தெரிவித்துள்ளது.
அய்.நா. நிறுவனம் வடகொரியா மீது விதித்துள்ள தடைகளைக் கண்காணிக்கும் நிபுணர் குழு அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வடகொரியா தனது ஏவுகணைகளில் அணு ஆயுதத்தைப் பொருத்தத் திட்டமிடுகிறது. அதற்கான சிறிய வடிவிலான சாதனங்களை தயாரித்து வைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment